Published : 19 May 2016 11:12 AM
Last Updated : 19 May 2016 11:12 AM

அசாமில் 15 ஆண்டுகால ஆட்சியை இழக்கிறது காங்கிரஸ்: பாஜக பெரும்பான்மை

அசாமில் வாக்களிப்புக்குப் பிறகான அனைத்து கருத்துக் கணிப்பும் பாஜக வெற்றி என்று கூறியிருந்தது. அதன் படியே அசாமில் 15 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வருகிறது.

இதனையடுத்து பாஜக முதல்வர் வேட்பாளர் சர்பானந்த சோனோவல் ஆட்சியமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தம் 126 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையில் பாஜக 74 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அடுத்த இடத்தில் காங்கிரஸ் 30 இடங்களிலும் ஏ.யு.டி.எஃப். 14 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது, மற்றவை கணக்கில் 8.

இதில் காங்கிரஸ் கட்சி 48 தொகுதிகளை இழந்துள்ளது. பாஜக 47 தொகுதிகளைக் கூடுதலாகப் பெற்றுள்ளது. மற்றவைகள் 5 தொகுதிகளில் கூடுதலாக முன்னிலை வகிக்கிறது.

அசாம் முதல்வர் தருண் கோகய், பாஜக முதல்வர் வேட்பாளர் சோனோவலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஆனால் டிடாபர் தொகுதியில் தருண் கோகய் முன்னிலை வகித்து வருகிறார்.

பாஜக முதல்வர் வேட்பாளர் சர்பானந்த சோனோவல் மஜூலி தொகுதியில் முன்னிலை வகிக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x