ரயில் நிலைய புனரமைப்பு பணிகளை வேகப்படுத்த பிரதமர் மோடி உத்தரவு

ரயில் நிலைய புனரமைப்பு பணிகளை வேகப்படுத்த பிரதமர் மோடி உத்தரவு
Updated on
1 min read

ரயில்வே பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, ரயில் நிலைய மேம் பாட்டுப் பணிகளை துரிதப்படுத் தும்படி அத்துறையைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

ரயில் நிலையங்களை மேம்படுத் தும் பணியைத் துரிதப்படுத் துவதுடன், படிப்படியாக இலக்கை அதிகரிக்கவும் செயல்திறன் மதிப்பீட்டுக் கூட்டத்தில் ரயில்வே துறையை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

மேலும், சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தின் செயல்திறன் குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அப்போது, இத்துறையில் தனியார் முதலீட்டை அதிகரிக்கவும், பல்வேறு நாடுகளில் உள்ள சாலை மேம்பாடு, பாதுகாப்பு முறைகளை ஆய்வு செய்து, அதில் நமக்கு ஏற்ற சிறந்தவற்றை பின்பற்றும்படியும் அறிவுறுத்தினார்.

நெடுஞ்சாலைகளில் உள்ள சிக்கலான அபாய வளைவுப் பகுதிகளை மாற்றியமைக்கவும், சுங்கச்சாவடிகளில் கட்டணங் களை வசூலிக்க புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும் எனவும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: 2015-16-ம் ஆண்டு ரயில்வே துறையில் ரூ. 93 ஆயிரம் கோடி மூலதன முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டை விட 65 சதவீதம் அதிகம். முன்னெப்போதையும் விடவும் அதிகம். இந்த ஆய்வுக் கூட்டத்தின்போது இதனைக் குறிப்பிட்ட பிரதமர், ரயில்வே துறை தனது உள்கட்டமைப்புகளை பல்வேறு வகையாக பயன்படுத்திக் கொள்வதை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். ரயில் நிலையங்களை மேம்படுத்துவதை துரிதப்படுத்துதல், புதிய பாதைகள் அமைத்தல், மின்பாதைகள் அமைத்தல் உட்பட ரயில்வே துறை உள்கட்டமைப்புகளை மேம்படுத்துதல் குறித்து இந்த ஆய்வில் விவாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத் துறைகளைப் பொறுத்தவரையில், 2015-16-ம் ஆண்டில் 6,000 கி.மீ. நீளத்துக்கு நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதே காலகட்டத்தில் மேலும் 10,098 கி.மீ. நீளத்துக்கு புதிய ஒப்பந் தங்கள் அளிக்கப்பட்டன என பிரதமருக்குத் தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in