சிகிச்சையில் தனியார் மருத்துவமனை கவனக்குறைவு: ரூ.64 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவு

சிகிச்சையில் தனியார் மருத்துவமனை கவனக்குறைவு: ரூ.64 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவு
Updated on
1 min read

மருத்துவர்களின் கவனக்குறை வால் கண்பார்வை பறிபோன குழந்தையின் தாய்க்கு ரூ.64 லட்சம் இழப்பீடு வழங்குமாறு டெல்லியை சேர்ந்த மருத்துவ மனைக்கு நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியை மையமாக கொண்டு பஞ்சாப், மேற்குவங்கம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மகாராஜா அக்ராசென் என்ற தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனை மீது பூஜா சர்மா என்பவர் தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத் திடம் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில் ‘எனது பச்சிளம் குழந்தை யின் கண் சிகிச்சைக்காக இந்த மருத்துவமனையில் 5 வாரங்களுக்கு மேலாக தங்கி யிருந்தேன். ஆனால் மருத்துவர்கள் முறையான சிகிச்சை அளிக்காமல் காலம் கடத்தி வந்தனர். இதன் காரணமாக எனது குழந்தையின் கருவிழி இடம் மாறி பார்வை பறிபோனது. எனவே சிகிச்சை விவகாரத்தில் கவனக்குறைவாக இருந்த மருத்துவமனை மற்றும் அதன் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுத்து உரிய இழப்பீடு பெற்றுத் தர வேண்டும்’ என கோரியிருந்தார்.

அவரது மனுவை விசா ரணைக்கு ஏற்றுக் கொண்ட நுகர் வோர் குறைதீர்ப்பு ஆணையம் மருத்துவ ஆவணங்களை ஆராய்ந்தது. அதில் குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதில் அலட்சியம் மற்றும் கவனக்குறைவாக இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட குழந்தைக்கும், தாய்க்கும் சேர்த்து ரூ.64 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தது. மேலும் வழக்குக்காக ஆன செலவையும் பூஜா சர்மாவுக்கு வழங்க வேண்டும் என மருத்துவ மனைக்கும், அதன் 3 மருத்துவர் களுக்கும் உத்தரவிட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in