Published : 14 May 2022 05:50 AM
Last Updated : 14 May 2022 05:50 AM

மடோனாவுக்கு ஸ்லோகங்கள் கற்றுத்தந்த சம்ஸ்கிருத அறிஞர் வகீஸ் சாஸ்திரி மறைவு

வாரணாசி: உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியைச் சேர்ந்த சம்ஸ்கிருத அறிஞர் பத்மஸ்ரீ பாகிரத் பிரசாத் திரிபாதி (88). இவர் வகீஸ் சாஸ்திரி என அழைக்கப்பட்டார். உடல்நலக் குறைவு காரணமாக கடந்த புதன்கிழமை இரவு இவர் காலமானார். இவரது இறுதிச் சடங்குகள் வாரணாசியில் உள்ள ஹரீஸ்சந்த்ரா படித்துறையில் நேற்று முன்தினம் நடந்தது.

இவரது சீடர்கள் உலகம் முழுவதும் உள்ளனர். பாப் பாடகி மாடானோ 24 ஆண்டுகளுக்கு முன்பு ‘ரே ஆஃப் லைட்’ என்ற இசை ஆல்பம் தயாரித்த போது அதில் ஆதி சங்கரரின் ‘யோகா தாராவ்லி’ என்ற வழிபாட்டுப் பாடலும் இடம் பெற்றிருந்தது. இதில் உள்ள சம்ஸ்கிருத ஸ்லோகங்களை மடோனாவால் சரியாக உச்சரிக்க முடியவில்லை. இதையடுத்து அவர் வகீஸ் சாஸ்திரியை தொடர்பு கொண்டு, அவரிடம் சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் கற்றுக்கொண்டார். இவரது மறைவுக்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ‘‘சம்ஸ்கிருதத்தை பிரபலம் அடையச் செய்த, வகீஸ் சாஸ்திரியின் பங்களிப்பு விலைமதிப்பற்றது. அவரது மறைவால் வேதனையடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி’’ என குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x