100 அடி ஆழ கிணற்றில் விழுந்த சிங்கம் மீட்பு

100 அடி ஆழ கிணற்றில் விழுந்த சிங்கம் மீட்பு
Updated on
1 min read

குஜராத் மாநிலத்தில் 100 அடி ஆழ கிணற்றில் விழுந்த ஆசிய சிங்கத்தை மீட்ட வனத்துறை அதிகாரிகள் அதனை கிர் வனப்பகுதிக்குள் விட்டனர்.

குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டம் ஜடக்லா கிராமத்தில, கடந்த சனிக்கிழமை மாயாபாய் அஹிர் என்பவரின் பண்ணையைச் சேர்ந்த எருமைகளை ஒரு சிங்கம் துரத்தி வந்தது. அதைப் பார்த்த சில பெண்கள் கூச்சலிடவே, வழிமாறி அருகே இருந்த 100 அடி ஆழ தண்ணீர் இல்லாத கிணற்றுக்குள் விழுந்துவிட்டது.

இதுதொடர்பாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக் கப்பட்டது. சுமார் நான்கு மணி நேர போராட்டத்துக்குப் பிறகு அந்த சிங்கம் மீட்கப்பட்டது.

“முதலில் கிணற்றுக்குள் கால் நடைத்துறை அதிகாரிகள் இறங்கி, அச்சிங்கத்துக்கு காயம் ஏற்பட் டுள்ளதா எனப் பரிசோதித்தனர். காயம் இல்லை என உறுதி செய்யப்பட்ட பிறகு, கயிறு மூலம் 4 வயது மதிக்கத்தக்க அந்தசிங்கம் மீட்கப்பட்டது” என வனத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதிகபட்ச வெப்பநிலை 43 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்ததால், சிங்கத்துக்கு மயக்க மருந்து கொடுக்கப்படவில்லை. மயக்கஊசி செலுத்தாமலேயே அதனைப் பிடித்து, கிர் காடுகளில் கொண்டு சென்று விடுவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in