

டெல்லியில் போலீஸ் வாகனத் தில், அழகான ஆண் குழந்தை ஒன்றை பெண் ஒருவர் பிரசவித் துள்ளார். தாயும் சேயும் நலமாக உள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை காலை சப்ஸிமண்டி ரயில் நிலையத்தில் ஆர்த்தி என்ற கர்ப்பிணி பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருப்ப தாக, டெல்லி காவல்துறை கட்டுப் பாட்டு அறை வாகனத்துக்கு தகவல் கிடைத்தது.
உடனடியாக அந்த வாகனத் தின் பணியாளர்கள் ரயில்நிலை யத்துக்குச் சென்று, ஆர்த்தியை அழைத்துக்கொண்டு, அருகில் உள்ள இந்து ராவ் மருத்துவ மனைக்கு புறப்பட்டனர்.
ஆனால், வழியிலேயே ஆர்த் திக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. போலீஸ் வாகனத்தின் உள்ளேயே ஆர்த்தி, சுகப்பிரசவ மாக தனது குழந்தையை பெற் றெடுத்துவிட்டார். தாயும், சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தனது தந்தை மற்றும் மாமியார் உடன் தாதர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்துக்கொண்டிருந்த ஆர்த்தி, குவாலியரில் இருந்து பானிப்பட் செல்ல இருந்ததாகவும், வழியில் எதிர்பாராதவிதமாக வலி ஏற்பட்டதாகவும், போலீஸார் தெரிவித்தனர்.