சத்தீஸ்கர் ஹெலிகாப்டர் விபத்து: 2 விமானிகள் பலி: விசாரணைக்கு டிஜிசிஏ உத்தரவு

சத்தீஸ்கர் ஹெலிகாப்டர் விபத்து: 2 விமானிகள் பலி: விசாரணைக்கு டிஜிசிஏ உத்தரவு
Updated on
1 min read

சத்தீஸ்கர் மாநில அரசுக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ராய்பூரில் உள்ள சுவாமி விவேகானந்தர் விமான நிலையம் அருகே நேற்றிரவு விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு பைலட்டுகளும் உயிரிழந்தனர்.

இந்த ஹெலிகாப்டரை விமானிகள் கேப்டன் கோபால் கிருஷ்ண பாண்டா, கேப்டன் ஏபி.ஸ்ரீவஸ்தவா ஆகியோர் இயக்கிக் கொண்டிருந்தனர். ஹெலிகாப்டரை தரையிறக்க முயன்றபோது திடீரென தீ பிடித்தது. இதில் ஹெலிகாப்டர் நிலை குலைந்து கீழே விழுந்தது.
ஹெலிகாப்டரில் இருந்து பைலட்டுகள் மீட்கப்படும்போது உயிர் இருந்தது. இருப்பினும் இருவருமே சிகிச்சை பலனின்றி இறந்தனர். விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து துறையான டிஜிசிஏ தெரிவித்துள்ளது.

இந்த விபத்துக் குறித்து தனது ட்விட்டர் பதிவில் வேதனை தெரிவித்துள்ள சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், உயிரிழந்த விமானிகள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், உடனடியாக நிவாரணம் வழங்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

ஹெலிகாப்டர் விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு உத்தர விடப்பட்டுள்ள நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் விபத்தை சந்தித்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in