முதல் முறையாக இந்திய தலைமை நீதிபதியை சந்தித்த நாடாளுமன்ற சட்டத்துறை நிலைக்குழு

முதல் முறையாக இந்திய தலைமை நீதிபதியை சந்தித்த நாடாளுமன்ற சட்டத்துறை நிலைக்குழு
Updated on
1 min read

சென்னை: முதல் முறையாக பொதுமக்கள் குறைகள், சட்டம், நீதிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் இந்திய தலைமை நீதிபதியைச் சந்தித்து பேசியுள்ளனர்.

இந்திய நாடாளுமன்றத்தில் துறை சார்ந்த பல நிலைக் குழுக்கள் உள்ளது. சம்பந்தப்பட்ட துறைகளின் திட்டங்கள் ஆய்வு செய்யும் பணியை இந்த குழுவினர் மேற்கொள்வார்கள். இந்நிலையில் இந்திய வரலாற்றில் முதல் முறையாக பொதுமக்கள் குறைகள், சட்டம், நீதிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் இந்திய தலைமை நீதிபதியை சந்தித்து பேசியுள்ளனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நிலைக்குழு உறுப்பினரும், திமுக மாநிலங்களவை உறுப்பினருமான பி,வில்சன், "இந்திய வரலாற்றில் முதல்முறையாக பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள், சட்டம், நீதிக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவர், உறுப்பினர்கள், உச்ச நீதிமன்ற தலைமை நீதியரசர் திரு.என்.வி.இரமணா மற்றும் நீதியரசர் Dr திரு.டி.ஒய்.சந்திரசூட் ஆகியோரை உச்ச நீதிமன்ற வாளாகத்தில் சந்தித்து உரையாடினோம்" என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in