‘அஸான்’ சர்ச்சையை தொடர்ந்து கர்நாடகாவில் ஒலிபெருக்கி பயன்படுத்த கட்டுப்பாடுகள்

‘அஸான்’ சர்ச்சையை தொடர்ந்து கர்நாடகாவில் ஒலிபெருக்கி பயன்படுத்த கட்டுப்பாடுகள்
Updated on
1 min read

பெங்களூரு: கர்நாடகாவில் மசூதிகளில் ‘அஸான்’ எனப்படும் பாங்கு ஒலிபெருக்கியில் ஓதுவதற்கு இந்துத்துவ அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு போட்டியாக இந்து கோயில்களில் ஒலிபெருக்கி மூலம் பஜனை பாடல்களை பாடும் போராட்டத்தையும் முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

உச்ச நீதிமன்றம் கடந்த 2005-ம் ஆண்டு ஒலிபெருக்கிகளில் அதிக சத்தம் எழுப்பி ஒலி மாசு ஏற்படுத்துவதற்கு தடை விதித்துள்ளது.

அதன்படி கர்நாடகாவில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலிபெருக்கி பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது. உரிய அனுமதி பெறாமல் ஒலிபெருக்கி பயன்படுத்துவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். உள் அரங்கு கூட்டங்கள், விருந்து நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்ட அளவில் மட்டும் ஒலிபெருக்கி பயன்படுத்த அனுமதிக்கப்படும்.

இவ்வாறு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in