Published : 11 May 2022 11:56 AM
Last Updated : 11 May 2022 11:56 AM

இந்தியாவில் தஞ்சமடைய அடைக்கலம் கேட்டாரா ராஜபக்சே?- மத்திய அரசு விளக்கம்

கொழும்பு: மகிந்தா ராஜ பக்சே குடும்பத்துடன் இந்தியாவிடம் அடைக்கலம் கேட்டு தப்பி சென்றுவிட்டதாக வெளியான தகவலை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இலங்கையில் பெட்ரோல், டீசலுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொருளாதார நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது. இலங்கை அர அரசியலில் அங்கம் ராஜபக்சே குடும்பத்தினர் பதவி விலகக்கோரி கொழும்பில் நாடாளுமன்றம் செல்லும் சாலையில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் போராடி வருகின்றனர்.

இரண்டு தினங்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக ராஜபக்சே ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். போராட்டக்காரர்களின் கூடாரங்களை கிழித்தெறிந்து தாக்குதல் நடத்தினர். இதனால் அவர்கள் மீது போராட்டக்காரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். இது பெரும் கலவரமாக மாறியது. மகிந்த ராஜபக்சே பதவி விலகியுள்ளார்.

இருப்பினும் பல இடங்களில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகிறன்றன. சில இடங்களில் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் பலர் காயமடைந்தனர். இதனால் இலங்கையே பற்றி எரிகிறது.


முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பாரம்பரிய வீட்டை எரித்தனர். ராஜபக்ச குடும்பத்தினரின் வீடுகள், சொத்துகள் தீக்கிரையாக்கப்பட்டன. 35 வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து மகிந்தா ராஜபக்சே கொழும்புவில் உள்ள பிரதமர் மாளிகையிலிருந்து ராணுவப் பாதுகாப்புடன் வெளியேறினார். திருகோணமலையில் உள்ள கடற்படை தளத்தில் தஞ்சமடைந்துள்ளாக தெரிகிறது.

ராஜபக்சே குடும்பத்தினர் தங்கியிருப்பதாக கூறப்படும் திரிகோணமலை கடற்படை தளம்

அவரது குடும்பத்தினர் ஹெலிகாப்டரில் கடற்படைத் தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கிருந்து வெளிநாட்டுக்க தப்பிச் செல்ல முயன்றதாக தகவல் வெளியானது.
அவர் குடும்பத்துடன் இந்தியாவிடம் அடைக்கலம் கேட்டு தப்பி சென்றுவிட்டதாக சமூக வலைதளங்கள் மற்றும் சில இலங்கை ஊடகங்களில் செய்தி பரவியது. ஆனால் இதனை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இது தொடர்பாக இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட செய்தி குறிப்பில், ‘‘குறிப்பிட்ட சில அரசியல்வாதிகளும் அவர்களின் குடும்பங்களும் இந்தியாவுக்கு சென்றிருப்பதாக ஊடகங்கள் சிலவற்றிலும், சமூக ஊடகங்களிலும் வதந்திகள் பரவுகிறது. இதனை இந்திய தூதரகம் மறுக்கிறது. இவை போலியானதும் அப்பட்டமான பொய்யானதுமான அறிக்கைகள். உள்நோக்கத்துடன் சொல்லப்படுபவை. எந்தவிதமான உண்மைகளோ அல்லது அர்த்தங்களோ இல்லாதவை. இவ்வாறான செய்திகளை தூதரகம் கடுமையாக மறுக்கின்றது’’ எனத் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x