கர்நாடகாவில் புதிதாக திறக்கப்பட்ட மிதவை பாலம் இரண்டே நாளில் சேதம்

சேதமடைந்த மிதவை பாலத்தில் சிக்கிய சுற்றுலா பயணிகள்.
சேதமடைந்த மிதவை பாலத்தில் சிக்கிய சுற்றுலா பயணிகள்.
Updated on
1 min read

பெங்களூரு: கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள மல்பே கடற்கரையில் 100 மீட்டர் நீளத்துக்கு ரூ.80 லட்சம் செலவில் மிதவை பாலம் அமைக்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் கடலில் 100 மீட்டர் தூரத்துக்கு நடந்து சென்று அழகை ரசிக்க ஏதுவாக உருவாக்கப்பட்ட இந்தப் பாலம் கடந்த 6-ம் தேதி திறந்து வைக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 8-ம் தேதி சுற்றுலாப் பயணிகள் சென்றபோது மிதவை பாலம் கடுமையாக சேதமடைந்தது. இதனால் சுற்றுலாப் பயணிகள் சிலர் கடலில் விழுந்தனர். அவர்களை அங்கிருந்த பாதுகாவலர்கள் பத்திரமாக மீட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. கடல் சீற்றத்தால் மிதவை பாலம் சேதமடைந்துள்ளதால் தற்காலிகமாக மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் யூ.டி.காதர் கூறும்போது, ''மிதவை பாலம் திறக்கப்பட்ட இரண்டாவது நாளே உடைந்திருப்பது அதன் கட்டுமானம் குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இதனை கட்டியதில் மிகப்பெரிய ஊழல் நடந்திருக்கிறது. முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு 40% கமிஷன் வாங்கியதே இந்த பாலம் சேதமடைய முதன்மையான காரணம்'' என குற்றம்சாட்டினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in