முஸ்லிம் மதத்துக்கு எதிரான கொலை: ஒவைஸி கருத்து

(கோப்புப்படம்)
(கோப்புப்படம்)
Updated on
1 min read

ஹைதராபாத்: ஹைதராபாத் அடுத்துள்ள ரங்காரெட்டி மாவட்டம், மார் பல்லி கிராமத்தை சேர்ந்த நாக ராஜுவும், பக்கத்து கிராமமான கன்பூர் கிராமத்தை சேர்ந்த சையது அஷ்ரின் சுல்தானாவும் காதலித்தனர். இதற்கு சுல்தானா வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடும் எதிர்ப்பை மீறி கடந்த ஜன. 31-ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

கடந்த புதன்கிழமை இரவில், சூரூர்நகர் பகுதியில் நாகராஜுவும், அஷ்ரின் சுல்தானாவும் மோட்டார் சைக்கிளில் சென்றனர். அப்போது சுல்தானாவின் சகோதரர் சையத் மோபின் அகமது, அவரது நண்பர் மசூத் அகமது இவர்களை பின்தொடர்ந்து சென்று, சுல்தானாவை கீழே தள்ளிவிட்டு, நாகராஜுவை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்தனர். கொலையாளி இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து எம்.ஐ.எம் கட்சி தலைவரும், ஹைதராபாத் எம்பியுமான அசதுதீன் ஒவைஸி கூறும்போது, ‘‘இந்த கொலை முஸ்லிம் மதத்துக்கு எதிரானது. காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகு அவர்களை கொல்ல யாருக்கும் உரிமை இல்லை. இதுபோன்ற சம்பவங் களுக்கு நாங்கள் யாருக்கும் ஆதரவு தர மாட்டோம்’’ என கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in