என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் உயிரிழப்பு

என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் உயிரிழப்பு
Updated on
1 min read

ஸ்ரீநகர்: தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் சேயான் தேவ்சர் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்தப் பகுதியை சுற்றி வளைத்து பாதுகாப்பு படையினர் நேற்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது ஓரிடத்தில்மறைந் திருந்த தீவிரவாதிகள், பாது காப்பு படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.அதற்கு பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்தனர். நீண்ட நேரம்நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இறந்த பாகிஸ்தான் தீவிரவாதியின் பெயர் ஹைதர். வடக்கு காஷ்மீரில் 2 ஆண்டுக்கும் மேலாக பல்வேறு தீவிரவாத செயல் களில ஈடுபட்டவர் என்று காஷ்மீர் ஐ.ஜி விஜயகுமார் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in