Published : 07 May 2022 06:22 AM
Last Updated : 07 May 2022 06:22 AM

ஆம்புலன்ஸுக்கு தர பணம் இல்லாததால் மகள் உடலை பைக்கில் எடுத்து சென்ற தந்தை

திருப்பதி: ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம் கொத்தபள்ளி கிராமத்தை சேர்ந்த அக்‌ஷயா (2) எனும் சிறுமி, வீட்டுக்கு அருகே மழைநீர் அதிகமாக இருந்த குழியில் தவறி விழுந்தாள். பின்னர் குழந்தையை மீட்டு நாயுடுபேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

சிறுமியின் உடலை சொந்த கிராமத்துக்கு கொண்டு செல்ல 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மறுத்துவிட்டார். தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் 10 ஆயிரத்துக்கு மேல் பணம் கேட்டனர். அவ்வளவு பணம் இல்லாததால், வேறு வழியின்றி குழந்தையின் உடலை உறவினரின் பைக்கில் வைத்துக் கொண்டு வீடு போய் சேர்ந்தனர். ஏற்கனவே இதுபோன்ற சம்பவம் திருப்பதி ருய்யா அரசு மருத்துவமனையில் நடந்தது. அதன் பின்னர் விசாரணை குழு அமைத்து அதிகம் பணம் கேட்க கூடாது என அனைத்து தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் ஆம்புலன்ஸ்களுக்கு கி.மீ. கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் இன்னும் மாறாமல் உள்ளனர்.

குறிப்பாக 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களாவது மனிதாபிமானத்துடன் செயல்பட வேண்டுமென்பது பொதுமக்கள் தரப்பு வாதமாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x