தடையை மீறி ஊர்வலம்: ஜிக்னேஷ் மேவானிக்கு 3 மாதம் சிறை

தடையை மீறி ஊர்வலம்: ஜிக்னேஷ் மேவானிக்கு 3 மாதம் சிறை
Updated on
1 min read

அகமதாபாத்: குஜராத்தில் வட்கம் தொகுதியின் சுயேச்சை எம்எல்ஏ.வாக இருக்கும் ஜிக்னேஷ் மேவானி காங்கிரஸுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.

இவர் கடந்த 2017-ம் ஆண்டு ராஷ்ட்ரிய தலித் அதிகார் மஞ்ச் என்ற அமைப்பின் சார்பில் மெஹ்சானா என்ற இடத்தில் போலீஸார் தடையை மீறி ஊர்வலம் நடத்தினார். இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு மெஹ்சானா மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில், போலீஸாரின் தடையை மீறி ஊர்வலம் சென்றதற்காக ஜிக்னேஷ் மேவானி மற்றும் 9 பேருக்கு 3 மாதம் சிறை தண்டனையும் தலா ரூ.1,000 அபராதமும் விதித்து நீதிபதி ஜே.ஏ. பார்மர் நேற்று உத்தரவிட்டார். ஊர்வலம் சென்றது குற்றமல்ல என்றும் போலீஸாரின் தடையை மீறி ஊர்வலம் சென்றதுதான் குற்றம் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in