திருமலையில் கடத்தப்பட்ட சிறுவன் மீட்பு

திருமலையில் கடத்தப்பட்ட சிறுவன் மீட்பு

Published on

திருமலை: திருப்பதி அடுத்துள்ள தாமிநேடு பகுதியை சேர்ந்தவர் வெங்கடரமணா. இவரது மகன் கோவர்தன் (5). வெங்கடரமணா திருமலையில் பக்தர்களுக்கு திருநாமம் இட்டு பிழைப்பு நடத்தி வருகிறார். கடந்த 1-ம் தேதி அவனை காணவில்லை.

திடீரென நேற்று கோவர்தனை திருமலை போலீஸ் நிலையத்தில் சிலர் ஒப்படைத்தனர். விசாரணையில் கர்நாடக மாநிலம் மாண்டியாவை சேர்ந்த பவித்ரா என்ற மனநலம் பாதிக்கப்பட்ட பெண், சிறுவனை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்து சிறுவனை ஒப்படைத்துள்ளனர். எனினும், பார்வதிக்கு மனநலம் சரியில்லை என்பது ஏற்க முடியாது. சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் போலீஸார் கூறினர். மேலும் கோவர்தனை அவனது தாயாரிடம் ஒப்படைத்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in