

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மத்தியில் 2 முறை ஆட்சி செய்த பின், அதனிடம் இருந்து ஆட்சியை தேசிய ஜனநாயக கூட்டணி பறித்தது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இக்கூட்டணி அரசு பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. இந்நிலை யில் முதலாண்டு நிறைவு விழா போலன்றி, 2-ம் ஆண்டு விழாவை விமரிசையாக கொண்டாட முடிவு செய்துள்ளார் பிரதமர் மோடி. இத் துடன் தனது ஆட்சியின் சாதனை களை பொதுமக்கள் முன் பட்டிய லிடவும் அவர் திட்டமிட்டுள்ளார். இதையொட்டி பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் எம்.பி., எம்எல்ஏ.க்களை நாடு முழுவதிலும் அவர் முடுக்கிவிட உள்ளார். இதை தொடங்கிவைக்கும் வகையில் உ.பி.யின் முராதாபாத் நகரில் நடைபெறும் விழாவில் பிரதமர் பங்கேற்க உள்ளார்.
இது குறித்து ‘தி இந்து’விடம் பாஜகவின் தேசிய செய்தித் தொடர் பாளர் காந்த் கூறும்போது, “அரசின் சாதனைகளை நாடு முழுவதிலும் பிரச்சாரம் செய்ய மத்திய அமைச்சர்கள் தலைமையில் முப்பதுக்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் ஒரு தேசிய நிர்வாகி, அந்தந்த மாநில எம்.பி., எம்எல்ஏக் கள் மற்றும் மாநிலத் தலைவர் கட்டாயம் இடம்பெறுமாறு செய்யப் பட்டுள்ளனர். ஒவ்வொரு குழுவுக் கும் 6 சாதனை பிரச்சார கூட்டங்கள் என சுமார் 200 கூட்டங்கள் நடத்தப்படும்” என்றனர்.
உ.பி.யில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதை யொட்டி பிரதமர் மோடி தனது அரசின் சாதனை பிரச்சாரத்தை உ.பி.யில் தொடங்கி வைக்கிறார். தேர்தல் காரணமாக இம்மாநிலத்தில் அதிக பிரச்சார கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உ.பி.யின் லக்னோவில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவும், பிஹாரின் பாட்னா, உத்தராகண் டின் டேராடூன், பஞ்சாபின் பதான் கோட் ஆகிய நகரங்களில் அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் பொதுக்கூட்டங் களை நடத்த உள்ளனர்.
அமைச்சர் அருண் ஜேட்லி, ம.பி.யின் போபால், பஞ்சாபின் அமிர்தசரஸ், உ.பி.யின் லக்னோ ஆகிய இடங்களில் நடைபெறும் கூட்டங்களில் பங்கேற்க உள்ளார். வெளியுறவு அமைச்சரான சுஷ்மா, ராஜஸ்தானின் ஜெய்பூர், மகராஷ் டிராவின் புனே, ஆந்திராவின் ஹைதராபாத் ஆகிய நகரங்களி லும் அமைச்சர் நிதின் கட்கரி, உ.பி.யின் கான்பூரிலும் நடைபெறும் கூட்டங்களில் பங் கேற்க உள்ளனர். இவற்றில் பாஜக ஆளும் மாநிலங்களில் நடைபெறும் கூட்டங்களில் அந்தந்த மாநில முதல்வர்களும் தவறாமல் பங் கேற்க உள்ளனர்.
இந்தக் கூட்டங்களில் மோடி அரசின் சாதனைகள் பொதுமக்கள் முன் எடுத்துரைக்கப்பட உள்ளது. இதில் குறிப்பாக முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் முடங்கிய திட்டங்களை மோடி அமல்படுத்தியதை விளக்க உள்ளனர்.