

உத்தராகண்டில் சொந்த எம்எல்ஏ.க் களிடம் ஹரிஷ் ராவத் குதிரை பேரம் நடத்தியதாக புதிய வீடியோ வெளியாகியுள்ளது.
குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட உத்தராகண்ட் மாநிலத்தில் உச்ச நீதிமன்ற உத்தர வுப்படி நாளை சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறது.
இதில் வெற்றி பெற ஹரிஷ் ராவத் சொந்த கட்சி எம்எல்ஏக்களிடமே குதிரை பேரத்தில் ஈடுபட்டு, 12 எம்எல்ஏக்களுக்கு தலா ரூ.25 லட்சம் தர முன்வந்ததற்கான ரகசிய வீடியோ ஆதாரங்கள் வெளியாகி யுள்ளன.
இந்நிலையில் கட்சியின் எம்எல்ஏக்கள் மற்றும் தலைவர் களின் தொலைபேசி உரையாடல் களை உளவுத் துறை மூலம் மத்திய அரசு ஒட்டுகேட்டு வருவதாக ஹரிஷ் ராவத் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, ‘‘எங்கள் கட்சி எம்எல்ஏக்கள் மற்றும் தலைவர்களுக்கு தொடர்ந்து மிரட்டல் தகவல்கள் அனுப்பி வைக் கப்படுகின்றன. தேசவிரோதியை போல என்னையும் உளவுத் துறை யினர் கண்காணித்து வருகின்றனர்’’ என்றார்.