உ.பி. விருந்தினர் மாளிகையில் எலி கடித்ததால் அமைச்சர் பாதிப்பு

உ.பி. விருந்தினர் மாளிகையில் எலி கடித்ததால் அமைச்சர் பாதிப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தில் தொடர்ந்து 2-வதுமுறையாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு கடந்த மாதம் பதவியேற்றது. இதில் விளையாட்டுத் துறை அமைச்சராக இருப்பவர் கிரிஷ் சந்திர யாதவ். இவர் இரண்டு நாள் நிகழ்ச்சிகளுக்காக புந்தேல்கண்ட் பகுதியில் உள்ள பாந்தா வந்திருந்தார். அங்கு வனப்பகுதியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் நேற்று முன்தினம் இரவு தங்கினார்.

இந்நிலையில் நள்ளிரவில் அமைச்சரின் அறைக்கு வந்த காட்டு எலி ஒன்று, உறக்கத்தில் அமைச்சர் கிரிஷின் காலில் கடித்து விட்டு தப்பியது. இதன் வலி தாங்காமல் நள்ளிரவில் எழுந்து அலறினார் கிரிஷ். இதனால் பாந்தா மாவட்ட அதிகாரிகள் மத்தியில் பரபரப்பு உருவானது. தன்னை கடித்தது விஷப்பாம்பாக இருக்குமோ என்ற சந்தேகமும் அமைச்சருக்கு வந்தது.

இதனால் எழுந்த அச்சம் காரணமாக மயங்கிய அவரது உடல்நலம் குன்றத் துவங்கியது. இதையடுத்து உடனடியாக பாந்தா அரசு மருத்துவமனைக்கு அமைச்சர் கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதில் உடல்நலம் தேறிய அமைச்சர் பிறகு லக்னோ நோக்கிப் புறப்பட்டார். முன்னதாக அமைச்சர் கிரிஷிடம் முதல்வர் யோகி மற்றும் சக அமைச்சர்கள் பலர் தொலைபேசி மூலம் உடல் நலம் விசாரித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in