மார்ச் மாதத்தில் 18 லட்சம் இந்தியரின் வாட்ஸ் அப் முடக்கம்

மார்ச் மாதத்தில் 18 லட்சம் இந்தியரின் வாட்ஸ் அப் முடக்கம்

Published on

புதுடெல்லி: இந்தியாவில் திருத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப (ஐடி) விதி கள் கடந்த ஆண்டு அமலுக்கு வந்தன. இதன்படி 50 லட்சத்துக்கும்மேற்பட்ட பயனர்களைக் கொண்டுள்ள டிஜிட்டல் தளங்கள், பெறப்பட்ட புகார்கள் மற்றும் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை மாதந்தோறும் வெளியிட வேண்டும்.

இதன்படி மார்ச் மாதத்துக்கான அறிக்கையை வாட்ஸ்-அப் நிறுவனம் வெளியிட்டுள்ளது. மார்ச் மாதத்தில் மட்டும் விதிகளை மீறியதாக 18.05 லட்சம் இந்தியர்களின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில், பயனாளர்கள் அளித்த புகார்கள் பற்றிய விவரம், அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in