நிதிஷுக்கு 12 மாநிலங்களில் இருந்து அழைப்பு

நிதிஷுக்கு 12 மாநிலங்களில் இருந்து அழைப்பு
Updated on
1 min read

மதுவிலக்கு பிரச்சாரம் செய்ய பிஹார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு 12 மாநிலங்களில் இருந்து அழைப்புகள் வந்துள்ளன.

பிஹாரில் கடந்த ஏப்ரல் 5 முதல் முழு மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணமான முதல்வர் நிதிஷ்குமாருக்கு நாடு முழுவதிலும் ஆதரவு பெருகி வருகிறது. இத்துடன் தங்கள் மாநிலத்துக்கும் வந்து மதுவிலக்கு பிரச்சாரம் செய்யுமாறு நிதிஷுக்கு 12 மாநிலங்களில் இருந்து அழைப்பு வந்துள்ளதாகவும், பல்வேறு வகை அமைப்புகள் இந்த அழைப்பை விடுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இது குறித்து ‘தி இந்து’விடம் ஐக்கிய ஜனதா தள எம்.பி.யும் பொதுச் செயலாளருமான கே.சி.தியாகி கூறும்போது, “இருபதுக் கும் மேற்பட்ட அமைப்புகள் தங்கள் மாநிலத்துக்கு வந்து மதுவிலக்கு பிரச்சாரம் செய்யு மாறு நிதிஷுக்கு அழைப்பு விடுத்துள்ளன. இதில் குறிப்பாக, மதுவிலக்கினால் ஏற்படும் வருவாய் இழப்பை எப்படி சமாளிக்கலாம் என்பதை எடுத்துரைக்குமாறு இந்த அமைப்புகள் கேட்டுக் கொண்டுள்ளன. உத்தராகண்ட், ஒடிசா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ம.பி., ஹரியாணா, பஞ்சாப், ஆந்திரா, கர்நாடகா உட்பட 12 மாநிலங்களில் இருந்து இந்த அழைப்புகள் வந்துள்ளன. இவற்றை ஏற்றுக்கொண்டு ஜூன் மாதத்தில் நிதிஷ் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க வாய்ப்புள்ளது” என்றார்.

இந்த அழைப்பு விடுத்தவர் களிடம் பேசி எப்படிப்பட்ட கூட்டங்கள் நடத்துவது என்பது உட்பட பல்வேறு விஷயங்களை ஆலோசிக்க ஒரு குழு அமைக் கப்பட்டுள்ளது. இக்குழு பரிந்துரை செய்யும் நிகழ்ச்சிகள் குறித்து நிதிஷ் இறுதி முடிவு எடுத்து தனது சுற்றுப்பயணத்தை அமைக்க இருக்கிறார். இந்த அழைப்புகளில் பெரும்பாலானவை மகளிர் அமைப்புகளிடம் இருந்து வந்துள்ளன. மற்றவற்றில் குறிப்பாக, மகாத்மா காந்தி மகராஷ்டிராவின் சேவா கிராமத்தில் அமைத்த ஆசிரமத்தில் இருந்து பெறப்பட்டுள்ளது. ஒடிசாவில் இருந்து காந்த் ஜீனாவிடம் இருந்து வந்துள்ள அழைப்பும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இவர், மன்மோகன் தலைமையிலான மத்திய அரசில் அமைச்சர் பொறுப்பில் இருந்தார். ஒடிசாவின் கட்டக் நகரில் கடந்த 2012 பிப்ரவரியில் கள்ளச்சாரயம் அருந்தி 35 பேர் இறந்ததே அவரது அழைப்புக்கான காரணம் ஆகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in