Last Updated : 12 May, 2016 10:29 AM

 

Published : 12 May 2016 10:29 AM
Last Updated : 12 May 2016 10:29 AM

விவசாயிகள் தற்கொலையை மோடி தடுக்கத் தவறிவிட்டார்: தேவ கவுடா குற்றச்சாட்டு

விவசாயிகள் தற்கொலையை பிரதமர் மோடி தடுக்கத் தவறிவிட்டார் என்று மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் எச்.டி. தேவ கவுடா குற்றம் சாட்டினார்.

கேரளாவில் இடதுசாரி கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச் சாரம் செய்ய வந்திருந்த தேவ கவுடா, திருவனந்தபுரத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

விவசாயிகளுக்காக மோடியின் அரசு எடுத்த நடவடிக்கைகள் எனக்கு திருப்தி அளிக்கவில்லை. விவசாயிகள் தற்கொலையை தடுக்க எவ்வித நேரடி திட்டத்தை யும் மோடி தொடங்கியதாக தெரியவில்லை. விவசாயிகளுக் காக மோடி அறிவித்த சில திட்டங்கள் குறுகிய காலத்தில் எவ்வித தாக் கத்தையும் ஏற்படுத்தாது. இது தொடர்பாக நான் பிரதமருடன் விவாதித்தேன். ஆனால் அவர் பதில் அளிக்கவில்லை.

நேரடி மானியத் திட்டம் பயனா ளிகளை சென்றடையவில்லை. இத்திட்டத்தால் விரும்பிய பலன்கள் கிடைக்கவில்லை. நாட்டில் விவசாயிகள் தற்கொலை, குறிப்பாக தெலங்கானா, ஆந்திரா, ஹரியாணா, கேரளா ஆகிய மாநிலங்களில் தொடர்கிறது.

மோடியும் மத்திய அமைச்சர்க ளும் கேரளாவில் தீவிர பிரச்சாரம் செய்கின்றனர். இதனால் சட்டப்பே ரவைக்குள் பாஜக நுழையுமா என்று தெரியவில்லை.

விஜய் மல்லையாவை நான் ஆதரிப்பதாக கூறுகிறார்கள். விஜய் மல்லையா மட்டுமல்ல, ஏராளமானோர் கோடிக்கணக்கில் வங்கிக் கடன் செலுத்தாமல் உள்ளனர் என்றுதான் கூறினேன். அவர்களின் பெயர்களை நான் வெளியிட விரும்பவில்லை.

இவ்வாறு தேவ கவுடா கூறினார்.

கேரளாவில் மார்க்சிஸ்ட் தலைமையிலான கூட்டணியில் மதச்சார் பற்ற ஜனதா தளம் 5 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x