

எனது துறை குறித்து கேட்க எதிர்க் கட்சிகளுக்கு கேள்வியே இல்லாத நிலையில் எப்போது வேண்டுமானாலும் சட்ட மன்றத்துக்கு வருவேன் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
மேற்கு வங்க மாநில சட்டமன்ற கூட்டம் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு தொடங்கியது. அப்போது முதல்வர் மம்தா சட்டமன்றத்துக்கு வரவில்லை. இதையடுத்து முதல்வர் அவையில் இல்லை என்று எதிர்க்கட்சியான இடதுசாரிகள் குற்றம்சாட்டி கோஷம் எழுப்பினர். முதல்வர் மம்தா சட்டமன்றத்துக்கு எப்போதாவதுதான் வருகிறார் என்று கூறிய அவர்கள், 11.08 மணிக்கு வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது.
மீண்டும் அவை கூடியபோது 11.50 மணிக்கு மம்தா சட்டப் பேரவைக்கு வந்தார். அப்போது பேசிய அவர், எனது துறை தொடர்பாக கேட்பதற்கு எதிர்க்கட்சிகளிடம் எந்த கேள்வியும் இல்லை. இந்த நிலையில் நான் எப்போது வேண்டுமானாலும் சட்டமன்றத்துக்கு வருவேன். பெரும்பாலான அவை நேரங்களில் நான் இங்குதான் இருந்துள்ளேன் என்று கூறினார்.