

தூய்மை இந்தியா திட்டத்தின்படி தூய்மையான, ஆரோக்கியமான பணிச் சூழலை உறுதி செய்யும் வகையில் அரசு அலுவலகங்களில் உள்ள திறந்தவெளி பகுதிகளில் சிறுநீர் கழித்தல், எச்சில் உமிழ்தல் போன்ற அநாகரீக செயல்களில் ஈடுபட்டால் அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதே போல் பொது இடங்களில் குப்பைகள் போடுதல் மற்றும் கட்டிட இடிபாடுகள், கழிவுகள் ஆகியவற்றை அகற்றாமல் இருந்தாலும் சம்பந்தப்பட்ட கட்டிட கான்டிராக்டருக்கும் அபராதம் விதிக்கப்படும்.
இது தொடர்பான புதிய தர செயல் நடைமுறைகள் வகுக்கப்பட்டு, மத்திய அரசின் அனைத்து துறை அலுவலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அலுவலங்களில் தூய்மையை உறுதி செய்யும் வகையில், தேவையான இடங்களில் குப்பைதொட்டிகள் அமைத்தல், பான், குட்கா போன்ற எச்சில் கறைகளை நீக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்றும் அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் 2 மாதங்களுக்கு ஒருமுறை கண்டிப்பாக ஒட்டுமொத்த அலுவலகத்தையும் தூய்மைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.