Last Updated : 30 Apr, 2022 06:32 AM

 

Published : 30 Apr 2022 06:32 AM
Last Updated : 30 Apr 2022 06:32 AM

அயோத்தி மசூதிகளில் ஆட்சேபகரமான பொருட்களை வீசி கலவரம் தூண்ட முயற்சி: முஸ்லிம்கள் போல் வேடமிட்டு வந்த 7 பேர் கைது

புதுடெல்லி: அயோத்தி மசூதிகளில் மதநம்பிக்கைக்கு எதிரானவற்றை வீசி கலவரம் தூண்ட முயற்சி நடந்தது.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள 2 மசூதிகளில் மத நம்பிக்கைக்கு எதிரான பொருட்களை ஒரு கும்பல் நேற்றுமுன்தினம் இரவு வீசிவிட்டு தப்பியது. முஸ்லிம்கள் போல் வேடமிட்டு 8 பேர் இரு சக்கர வாகனங்களில் வந்து பொருட்களை வீசி சென்றனர்.

இதுதொடர்பாக தகவல் அறிந்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

மசூதிகளை சுற்றி உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்த போது, குற்றவாளிகள் தலையில் குல்லா, முகக்கவசம் மற்றும் துண்டுகளை அணிந்து இரு சக்கர வாகனங்களில் வந்து செல்வது தெரிந்தது. இதையடுத்து தீவிர விசாரணை நடத்தி 7 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து அயோத்தியா மண்டல ஐ.ஜி. கவிந்திரா பிரதாப்சிங் கூறும்போது, ‘‘நான்கு நாட்களுக்கு முன்பு திட்டமிட்டு, முஸ்லிம்களின் புனித நூலான திருக்குரானின் சில பக்கங்களையும், ஆட்சேபத்துக்குரிய மாமிசத்தையும் வீசியுள்ளனர். கலவரத்தை தூண்டும் வகையில் சுவரொட்டி களும் ஒட்டப்பட்டிருந்தன. மஹேஷ்குமார் மிஸ்ரா என்பவர் தலைமையில் அவரது வீட்டில் இச்செயலுக்காக திட்டம் தீட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் 11 பேர் திட்டமிட்டு 8 பேர் அரங்கேற்றியுள்ளனர். இவர்களில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்ற நால்வரை தேடி வருகிறோம்’’ என்று தெரிவித்தார்.

அயோத்தி நாகர் பகுதியை சேர்ந்த மஹேஷ் குமார் மிஸ்ரா,பஜ்ரங் தளத்தின் முன்னாள் நிர்வாகியாக இருந்தவர். இவருடன் பிரத்யூஷ் வாத்சவா, நிதின் குமார், தீபக் குமார் கவுர், பிரஜேஷ் பாண்டே, சத்ருகன் பிரஜாபதி மற்றும் விமல் பாண்டே ஆகியோரும் கைதாகி உள்ளனர். இவர்களில் மஹேஷ், நிதின், விமல் ஆகியோர் மீது ஏற்கெனவே அயோத்தி காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளன.

நான்கு இரு சக்கர வாகனங்களில் சென்ற 8 பேரும், அயோத்தியின் 6 முக்கிய மசூதிகளில் ஆட்சேபகரமான பொருட்களை வீச திட்டமிட்டுள்ளனர். சில மசூதிகளின் முன்பு ரோந்து போலீஸாரின் வாகனங் கள் இருந்ததால், அவற்றை தவிர்த்து மற்ற மசூதி பகுதிகளில் விசியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், டெல்லி ஜஹாங்கிர்புரியில் கடந்த 16-ம் தேதி அனுமன் ஜெயந்தி ஊர் வலத்தில் ஏற்பட்ட கலவரத்துக்கு பதில் அளிக்கும் வகையில் அயோத்தியில் இதை செய்ததாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அயோத்தி எஸ்எஸ்பி சைலேஷ் குமார் பாண்டே கூறும்போது, ‘‘மசூதிகள் முன்பு ஆட்சேபகரமான பொருட் களை வீச 4 நாட்களுக்கு முன்டே வாங்கியுள்ளனர். இரண்டு குர்ஆன் புனித நூல்களின் பக்கங்களை கிழித்து வீசியுள்ளனர். நாகா பகுதியின் ஒரு தாபாவில் அனைவரும் கூடி இரவு விருந்து உண்ட பின்னர் இந்த சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது’’ என்றார்.

ரம்ஜான் பண்டிகைக்கு ஒரிருதினங்கள் முன்பாக நடந்துள்ள இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட வர்களை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்துள்ளதால், உ.பி.யில் ஏற்பட இருந்த மதக்கலவரம் தடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 7 கைப்பேசிகள் மற்றும்குல்லாக்கள் கைப்பற்றப்பட் டுள்ளன. துரிதமாக செயல்பட்டு 7 பேரை கைது செய்த போலீஸ் குழுவுக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x