Published : 12 May 2016 10:34 AM
Last Updated : 12 May 2016 10:34 AM

செம்மர கடத்தல் வழக்கில் மாடல் அழகி கைது

செம்மர கடத்தல் வழக்கில் கடத்தல் காரர்களுக்கிடையே பண பரிமாற்றம் செய்த கொல்கத்தாவைச் சேர்ந்த மாடல் அழகியை சித்தூர் போலீஸார் கைது செய்தனர்.

கொல்கத்தாவை சேர்ந்த சங்கீதா சட்டர்ஜி விமான பணிப்பெண்ணாக பணியாற்றி வந்துள்ளார். மேலும் மாடல் தொழிலிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு செம்மர கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வந்ததாக போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

திருப்பதி சேஷாசலம் வனப் பகுதியில் இருந்து மும்பை, கொல்கத்தா வழியாக வெளிநாடுகளுக்கு செம்மரம் ஏற்றுமதி செய்யும் கடத்தல்காரர்களுக்கு இடையே பணப்பரிமாற்றம் செய்ய சங்கீதா சட்டர்ஜி உதவி செய்து வந்துள்ளார்.

அவரது கணவர் லட்சுமணனைக் கைது செய்து போலீஸார் நடத்திய விசாரணையில் இத் த கவல்கள் தெரியவந்தன. இதைத் தொடர்ந்து சங்கீதா சட்டர்ஜி கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சித்தூர் அருகே உள்ள யாதமரி, கங்காதார நெல்லூர், பீலேர் ஆகிய பகுதிக ளில் செம்மரம் கடத்தியவர்களுக்கு உதவி புரிந்துள்ளதாக வழக்குகள் பதிவாகி உள்ளன.

சங்கீதா சட்டர்ஜி வரும் 18-ம் தேதி சித்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். இவரின் பாஸ்போர்ட், வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x