

ஆம் ஆத்மி கட்சியின் மகாராஷ் டிரா மாநில ஒருங்கிணைப்பாளர் அஞ்சலி தமானியா, கட்சியி லிருந்து விலகிவிட்டார்.
மாநில செயலாளர் பிரீத்தி மேனனும் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.
தனது ராஜினாமா முடிவு குறித்து கட்சித் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், “மிகவும் மன வருத்தத்துடன் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து வெளியேறு கிறேன். தேசிய ஒருங்கிணைப் பாளர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு எனது வாழ்த்துகள். அவர், எனக்கு மூத்த சகோதரர் போன்றவர்.
வாழ்வியல் மதிப்பீடுகளில் எந்தவிதமான சமரசத்துக்கும் இது வரை நான் இடம் கொடுத்த தில்லை. இனிவரும் காலங்களி லும் அவ்வாறே இருக்க விரும்பு கிறேன். கட்சியிலிருந்து நான் ராஜினாமா செய்துள்ளது தொடர் பாக தேவையற்ற கட்டுக்கதை களைப் பரப்ப வேண்டாம் என அனைவரையும் கேட்டுக்கொள் கிறேன். எனது ராஜினாமாவுக்கான காரணத்தைத் தெரிவிக்க விரும்ப வில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
அஞ்சலி தமானியா, பிரீத்தி ஆகியோர் பதவி விலகியுள்ளது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவ ரான மயங்க் காந்தி கூறுகையில், “கட்சியின் அனைத்து நிலைகளி லும் தகவல் தொடர்பு சரியாக இல்லை. கட்சியின் குழு உறுப் பினர்கள் மீது தொண்டர்கள் புகார் கூறி வந்துள்ளனர். இதனால், ஊழலுக்கு எதிரான செயல்பாடு உள்ளிட்ட முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டதால், அஞ்சலி தமானியா தனது பதவியை ராஜினாமா செய் துள்ளார்.
அவரை சமாதானப் படுத்தி கட்சியில் தொடரவைப் பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். கட்சி விவகாரங்கள் குறித்து விசாரிக்க தனியாக குழு ஒன்றை ஏற்படுத்துவது குறித்து அவரிடம் பேசி வருகிறோம். இதன் மூலம், ஊழலுக்கு எதிரான தனது பணியை அவரால் திறம்பட மேற்கொள்ள முடியும்” என்றார்.
கடந்த மக்களவைத் தேர்தலில் அஞ்சலி தமானியா, நாக்பூர் தொகுதியில் பாஜக முன்னாள் தலைவர் நிதின் கட்கரியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தார். இத்தேர்தலில் 5,87,767 வாக்கு களைப் பெற்று நிதின் கட்கரி வெற்றி பெற்றார். 69,081 வாக்கு களைப் பெற்ற அஞ்சலி தமானியா நான்காவது இடத்தைப் பிடித்தார்.