Published : 29 Apr 2022 05:24 AM
Last Updated : 29 Apr 2022 05:24 AM

அசாமில் 7 புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனை தொடக்கம்: ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை ரத்து செய்வதாக பிரதமர் உறுதி

அசாம் மாநிலம் திப்ருகரில் புற்றுநோய் மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்து பார்வையிட்டார். அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா உடன் உள்ளார்.படம்: பிடிஐ

திப்ருகர்: அசாமில் 7 புற்றுநோய் மருத்துவ மனைகளை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங் களில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் ரத்தாகும் என்று மோடி உறுதி அளித்தார்.

அசாம் மாநிலத்தில் மத்திய அரசும் தொழிலதிபர் ரத்தன் டாடாவின் அசாம் புற்றுநோய் சிகிச்சை அறக்கட்டளையும் இணைந்து 17 மருத்துவமனைகள் அமைக்க முடிவு செய்துள்ளன. இதில் அசாமில் திப்ருகர் மாவட்டத்தில் புற்றுநோய் மருத்துவமனையை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

இதுதவிர, அசாமில் பர்பேட்டா, தேஜ்பூர் உட்பட 6 இடங்களில் புற்றுநோய் மருத்துவமனைகளை காணொலிக் காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மேலும், துப்ரி, கோல்பரா, தின்சுக்யா உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அமைக்கப்பட உள்ள 7 புற்றுநோய் மருத்துவமனைகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். மேலும், கால் நடை அறிவியல் மற்றும் விவசாயக் கல்லூரிக்கான அடிக்கல்லையும் பிரதமர் திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் அசாம் ஆளுநர் ஜக்தீஷ் முகி, மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, அசாமில் திபு பகுதியில் அமைதி, ஒற்றுமை, வளர்ச்சி என்ற தலைப்பில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

பாஜகவின் இரட்டை இன்ஜின் அரசு எடுத்த நடவடிக்கைகளால் அசாம் மாநிலத்தில் அமைதியும் விரைவான வளர்ச்சியும் ஏற்பட்டுள் ளது. நாகாலாந்து, அசாம், மணிப்பூர் மாநிலங்களின் பல பகுதிகளில் தீவிரவாதம் கட்டுப்படுத்தப்பட்டு அமைதி திரும்பியதால் இந்த மாநிலங்களின் பல்வேறு பகுதி களில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் கடந்த ஏப்ரல் 1 முதல் வாபஸ் பெறப்பட்டது.

ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களிலும் நிரந்தர அமைதிக் கும் விரைவான வளர்ச்சிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகி றது. இதற்காக அசாமிலும் திரிபுராவிலும் அரசு அமைதி ஒப்பந்தங்களை செய்துள்ளது. நிரந்தரமாக அமைதி திரும்பியதும் ஒட்டுமொத்தமாக வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் வாபஸ் பெறப்படும். பாஜக ஆட்சியில் வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சி பெற்றுள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x