

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை ரத்து செய்ய வேண்டும் என எழுப்பப்பட்டுள்ள சர்ச்சை தொடர்பாக ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி (ஜேகேஎல்எப்) கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த பிரிவில் எந்த மாற்றம் செய்யவும் மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும் அது தெரிவித்துள்ளது.
இது பற்றி ஜேகேஎல்எப் தலைவர் முகம்மது யாசின் மாலிக் கூறியதாவது:
காஷ்மீரில் அரசியல் விவாதத்தை மாற்றவே இந்த பிரச்சினையை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுப்பியுள்ளார். 370-வது பிரிவு பற்றி நாடே பேசக்கூடிய வகையில் அரசு வெற்றி கண்டுவிட்டது. காஷ்மீரில் அரசியல் விவாதத்தை மாற்றி அமைப்பதற்கான முயற்சி இது.
புனிதப்போருக்கு எதிராக குரல் கொடுக்கும் தேசிய மாநாட்டுக்கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவையே இத்தகைய நிலைக்கு காரணம். 370-வது சட்டப்பிரிவை இவை ஒடுக்கி விட்டன, இந்த சட்டப்பிரிவில் மாற்றம் செய்ய இந்திய அரசுக்கோ அல்லது நாடாளுமன்றத்துக்கோ அதிகாரம் இல்லை.இவ்வாறு மாலிக் தெரிவித்தார்.