

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.
காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சச்சின் சாவந்த் மும்பையில் நேற்று செய்தியாளர்களிடம் இத்தகவலைத் தெரிவித்தார். மகாராஷ்டிரா மாநில சட்டமேலவை தேர்தலுக்கான காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர்களும் இன்று தங்களின் வேட்புமனுக்களை தாக்கல் செய்வார்கள் என அவர் தெரிவித்தார்.