

பெங்களூரு: கர்நாடகாவின் ஆளும் கட்சியான பாஜக, முஸ்லிம்களுக்கு எதிரான மனநிலையை மாநிலம் முழுவதும் உருவாக்க திட்டமிட்டுள்ளது. கர்நாடகாவை பொறுத்தவரை அங்கு வகுப்புவாத கலவரங்கள் புதிதல்ல... ஆனால் சமீப ஆண்டுகளில் இது தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில வருடங்களில் கர்நாடகாவில் தீவிர வகுப்புவாத கலவரங்கள் மாநிலம் முழுவதும் பரவலாக நடந்தது. குறிப்பாக தலைநகர் பெங்களூரிலும் இம்மாதிரியான சம்பவங்கள் நடந்ததை நாம் பார்த்தோம்.
இந்த நிலையில், கர்நாடக பொதுத் தேர்தலை முன்னிட்டு இந்த வகுப்புவாத கலவரத்தை முதன்மை ஆயுதமாக பாஜக எடுத்துள்ளது. அதற்கு இரண்டு வழிகளை பாஜக கொண்டிருக்கிறது. அதில் முதலாவது, தற்போதைய வகுப்புவாத அலை பாஜகாவால் தெளிவாக திட்டமிடப்பட்டுள்ளது. கர்நாடகாவின் கடந்த காலங்களில் வகுப்புவாதத்திற்கு வழிவகுத்த நிறைய சம்பவங்கள் நடந்துள்ளன. அவற்றின் தீவிரம் உச்சத்தை அடைந்த பிறகு குறைந்தது.
அதைப்போன்றே தற்போது வகுப்புவாத கலவரங்களை ஏற்படுத்த பாஜக பல பிரச்சனைகளை வரிசையாக வைத்துள்ளது. அவற்றை ஒன்றன் பின் ஒன்றாக பாஜக பின்பற்றி வருகிறது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மாநிலத் தேர்தல் முடியும் வரை, வகுப்புவாத பதற்றங்களை தொடர்ந்து உச்சத்தில் வைத்திருப்பதற்கான முயற்சி பாஜகவிடம் தெளிவாக உள்ளது.
இரண்டாவது, முஸ்லிம்களுக்கு எதிரான மனநிலையை மாநில பிரச்சினையாக மாற்ற முயற்சிப்பது. உதாரணம் முஸ்லிம் பெண்கள் பள்ளிக்கு செல்லும் ஆடைகளால் இந்துக்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்படுவதில்லை, ஆனால் பாஜக அரசாங்கம் ஹிஜாப் அணிவதை ஒரு ஒருங்கிணைந்த மாநில பிரச்சினையாக மாற்றியது.
எதிர்கட்சிகளின் மெத்தன செயல்பாடு
கர்நாடகாவில் உள்ள எதிர்கட்சிகளின் மோசமான சித்தாந்த செயல்பாடு, வகுப்பு வாத கலவரங்களை அரங்கேற்றும் பாஜகவுக்கு உதவி இருக்கிறது என்றுதான் கூற வேண்டும். பெரும்பாலான வகுப்புவாத கலவரங்களின்போது காங்கிரஸ் கட்சி அமைதியே காத்தது. கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் சித்தராமையா பாஜகவின் வகுப்புவாத கலவரங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். இதில் பிரச்சனை என்னவென்றால் அவர் தனியாக குரல் கொடுத்து வருகிறார். ஜனதா தள் கட்சி கடந்த சில வாரங்களாக பாஜகவின் வகுப்புவாத கலவரங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. ஏனெனினும் கடந்த காலங்களில் பாஜகவுடன் கூட்டணி வைத்ததன் காரணமாக வகுப்புவாத கலவரங்களை விமர்சிப்பதா? அல்லது அதன் அரசியல் பயனை அனுபவிப்பதா என்ற ஊசலாட்டத்தில் ஜனதா தள் கட்சி உள்ளது.
எதிர்த்து போரிடல்:
பாஜகவுக்கு எதிராக தைரியமாக சண்டையிடுதலை காட்டிலும் விவேகத்தையே எதிர்கட்சிகள் தேர்வு செய்துள்ள நிலையில் மக்கள் அவரவர் விருப்பத்துக்கு தனித்து விடப்பட்டுள்ளனர். எனினும் எதிர்கட்சிகளை காட்டிலும் பொதுமக்கள் சிறப்பாகவே பாஜகவுக்கு எதிர்வினையாற்றுக்கின்றனர்.
அதற்கு உதாரணம்தான் பெங்களூரின் பெரிய திருவிழாவான 300 ஆண்டுகள் பாரம்பரியமான கரகா தேரோட்ட விழாவில் நடந்தது. கரோனா காரணமாக கடந்த 2 வருடங்களாக கரகா தேரோட்டம் நடைபெறவில்லை. இந்த நிலையில் இந்த வருடம் ஏப்ரல் மாதம் நடந்த கரகா தேரோட்ட விழாவில் தங்களது பாரம்பரிய வழக்கப்படி தோரோட்டத்தின்போது அப்பகுதியிலுள்ள மசூதிக்கும் வருகை புரிவோம் (மொஹகரம் பண்டிகையின்போது இஸ்லாமியர்கள் கோவிலுக்கு வருகை புரிவார்கள்) என்று ஏற்பாட்டாளர்கள் அறிவித்தனர். அவ்வாறே 900 ஆண்டுகள் பழமையான சென்னகேசவர் கோவிலும் தங்களது மரபுப்படி திருவிழாவை நடத்தினர்.
இந்த நிகழ்வு கர்நாடகாவின் வகுப்புவாத பிரச்சனைகளுக்கு மக்கள் ஆற்றிய எதிர்வினையாகவே பார்க்கப்படுகிறது. இதுமட்டுமல்ல ஹலால் இறைச்சியை வாங்கக் கூடாது என்ற பாஜகவின் பிரச்சாரத்தை கர்நாடக மக்கள் புறக்கணித்துள்ளனர். சைவ உணவை சாப்பிடுப்பவர்களுக்கு எங்களது உணவை தேர்வு செய்யும் உரிமை இல்லை என்று மக்கள் நினைத்தனர்.
பாஜகவின் வகுப்புவாதத் திட்டத்தை நிறுத்த, இந்த தன்னியல்பான உள்ளூர் எதிர்ப்புகள் பெரிய அரசியல் செயல்முறைகளில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இது முடியாத செயல் அல்ல. நிச்சயம் முடியும்.
லிங்காயத் மடங்களை பாஜகவுக்கு ஆதரவாக அணி திரட்டுவது என்பது கர்நாடக பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான எடியூரப்பாவின் வியூகங்களில் ஒன்று. இந்த மடங்கள் பல நூற்றாண்டுகளாக தங்களுக்கான செல்வாக்குமிக்க மண்டலங்களை கர்நாடகாவில் உருவாக்கியுள்ளன. இந்த நிலையில்தான் பாஜக தீவிர வகுப்புவாத நிலையை தேர்ந்தெடுக்கும்போது கர்நாடாகவில் ஆர்.எஸ்.எஸ்-ஸின் செல்வாக்கு அதிகம் வெளிப்படுகிறது. இதனால் பாரம்பரிய லிங்காயத் மடங்களின் செல்வாக்கு பின்னுக்கு தள்ளப்படும் சூழல் உருவாகலாம். கர்நாடக லிங்காயத் மடத்தை சேர்ந்த தலைவர் ஒருவர், அரசால் மடங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை பெற 30% கமிஷன் தர வேண்டியுள்ளது என்று வெளிப்படையாக அறிவித்ததிருந்தது நினைவுக்கூரத்தக்கது.
மேலும், அரசாங்கத்தால் வகுப்புவாத மோதலின் பாதைக்கு இட்டுச் செல்லும் ஒரு நகரத்தில் முதலீடு செய்வதற்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதைத்தான் பயோகான் தலைவர் கிரன் மசும்தர் ஷாவும் வெளிப்படுத்தினார். பாஜகவின் வகுப்புவாத திட்டத்தால் சர்வதேச முதலீடுகளின் வீழ்ச்சி குறித்து அக்கட்சி கருத்தில் கொள்ள வேண்டும்.
பாஜகவின் தீவிர வகுப்புவாதத் திட்டம் இதன் காரணமாகவே சமநிலையில் தொங்கிக் கொண்டிருக்கிறது. எனினும் தேர்தல் நேரத்தில் இந்துத்துவ ஒருங்கிணைப்பை தூண்டும் வகையில் முஸ்லிம்கள் மீது வெறுப்பை உருவாக்க முடியும் என்று பாஜக கட்சி நினைக்கலாம். ஆனால் கர்நாடக மக்கள் அனைத்து ஒத்திசைவான மரபுகளையும் வெறுமனே கைவிடுவார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும் கவலையை ஏற்படுத்த வேண்டிய விஷயம் உள்ளது என்றால், அது பாஜகவின் வகுப்புவாத பிரச்சாரம், இதில் பரவலான சமூக மற்றும் பொருளாதார சேதங்கள் முஸ்லிம்களுக்கு மட்டும் அல்ல...
- நரேந்திர பானி, பெங்களூரு தேசிய ஆய்வுகள் நிறுவனத்தின் பேராசிரியர் மற்றும் டீன்