உலகில் குவாலியர், அலகாபாத் உட்பட 4 இந்திய நகரத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகம்: உலக சுகாதார நிறுவனம் தகவல்

உலகில் குவாலியர், அலகாபாத் உட்பட 4 இந்திய நகரத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகம்: உலக சுகாதார நிறுவனம் தகவல்
Updated on
1 min read

உலகில் சுற்றுச்சூழல் அதிகமாக பாதிக்கப்பட்ட முதல் 10 நகரங்களில், இந்தியாவில் மட்டும் 4 நகரங்கள் உள்ளன என்று உலக சுகாதார நிறுவனம் (டபிள்யூஎச்ஓ) தகவல் வெளியிட்டுள்ளது.

உலகில் உள்ள நகரங்களில் காற்றின் தரம் குறித்த புள்ளிவிவர அறிக்கையை, உலக சுகாதார நிறுவனம் நேற்று வெளியிட்டது. மொத்தம் 103 நாடுகளில் உள்ள 3000 நகரங்களில் உள்ள காற்றின் தரம் குறித்து ஆய்வு செய்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஈரான் நாட்டின் ஸபோல் நகரம்தான் உலகிலேயே சுற்றுச் சூழல் அதிகமாக பாதிக்கப்பட்ட நகரம் என்று தெரிய வந்துள்ளது.

அதற்கடுத்து இந்தியாவின் குவாலியர் மற்றும் அலகாபாத் ஆகிய நகரங்கள் முறையே 2-வது, 3-வது இடத்தை பிடித்துள்ளன. தவிர பாட்னா 6-வது இடத்திலும் ராய்ப்பூர் 7-வது இடத்திலும் உள்ளன. அதிக மாசடைந்த முதல் 10 நகரங்களில் இந்தியாவின் 4 நகரங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், முதல் 20 நகரங்களில் 10 மாசடைந்த நகரங்கள் இந்தியாவில்தான் உள்ளன.

அதிக காற்று மாசடைந்த நகர மாக கூறப்பட்டு வரும் டெல்லி, இந்தப் பட்டியலில் 11-வது இடத் துக்கு வந்துள்ளது. இதன்மூலம் உலகின் சுற்றுச்சூழல் அதிகம் மாசடைந்த நகரங்களில் இனி டெல்லி முன்னணி பட்டியலில் இருக்காது.

காற்றில் உள்ள தூசி, புகை போன்றவற்றின் அளவை கணக் கில் கொண்டு ‘PM 2.5’ ‘PM 10’ என்று 2 வகையாக காற்றின்தரத்தை நிர்ணயிக்கின்றனர். அதன்படி, பிஎம் 2.5 அளவில் டெல்லி 11-வது இடத்தையும், பிஎம் 10 அளவில் 25-வது இடத்தையும் டெல்லி பிடித்துள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு உலகின் மிக அதிகமாக காற்று மாசுப்பாடு நிறைந்த நகரமாக டெல்லியை உலக சுகாதார நிறுவனம் அறிவித் திருந்தது. அதன்பின், இந்தளவுக்கு காற்றின் தரம் உயர்ந்துள்ளது. கடந்த முறை 1600 நகரங்களில் மட்டும்தான் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த முறை கூடுதலாக 1400 சேர்த்து மொத்தமாக 3000 நகரங்க ளில் காற்றின் தரத்தை ஆய்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in