இமாச்சலில் பொது சிவில் சட்டம்: முதல்வர் ஜெய்ராம் அறிவிப்பு

ஜெய்ராம் தாக்குர்
ஜெய்ராம் தாக்குர்
Updated on
1 min read

சிம்லா: பொது சிவில் சட்டத்தை இமாச்சல பிரதேச மாநிலத்தில் அமல்படுத்த தயாராக இருக்கிறோம் என்று முதல்வர் ஜெய்ராம் தாக்குர் தெரிவித்தார்.

பாஜக கொள்கைகளில் பொது சிவில் சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என்பதும் முக்கியமாக உள்ளது. இமாச்சல் தலைநகர் சிம்லாவில் உள்ள இமாச்சல் பவனில் செய்தியாளர்களிடம் நேற்று முதல்வர் ஜெய்ராம் தாக்குர் கூறியதாவது:

பொது சிவில் சட்டம் (யுசிசி) ஒரு நல்ல திட்டமாகும். இதை மாநிலங்களில் அமல்படுத்தலாம். இந்த பொது சிவில் சட்டத்தை இமாச்சல் பிரதேச மாநிலத்தில் அமல்படுத்துவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். திறந்த மனத்துடன் இதை வரவேற்கிறோம்.

இந்த பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக மாநிலத்தில் பரிசீலனை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு ஜெய்ராம் தாக்குர் கூறினார்.

அப்போது இமாச்சல பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில், பாஜகவுக்கு போட்டியாக ஆம் ஆத்மி இறங்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறதே என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு ஜெய்ராம் தாக்குர் கூறும்போது, “இமாச்சல பிரதேச மாநிலம் அமைதியான மாநிலம். ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் ஸ்டைல் இங்கு சரிப்பட்டு வராது. 3-வது அணியை இந்த மாநிலம் எப்போதும் ஏற்காது” என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in