அடிப்படை வசதி கோரிய கர்நாடக இளைஞரை அறைந்த காங்கிரஸ் எம்எல்ஏ

அடிப்படை வசதி கோரிய கர்நாடக இளைஞரை அறைந்த காங்கிரஸ் எம்எல்ஏ
Updated on
1 min read

பெங்களூரு: கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் பவகடா தொகுதிக்கு உட்பட்ட நாகேனஹள்ளியை சேர்ந்தவர் நரசிம்ம மூர்த்தி (26). இவர் நேற்றுமுன்தினம் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ வெங்கட ரமணப்பாவை சந்தித்து, நாகேனஹள்ளியில் சாலை, குடிநீர் வசதிகள் இல்லை. அவற்றை உடனடியாக சரி செய்து தர வேண்டும் என்று கோரினார்.

இதனால் கோபமடைந்த வெங்கட ரமணப்பா, நரசிம்ம மூர்த்தியின் கன்னத்தில் அறைந்தார். இதை சற்றும் எதிர்பாராத அவர், எம்எல்ஏவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து எம்எல்ஏ.வின்ஆதரவாளர்கள் அங்கிருந்து நரசிம்ம மூர்த்தியை அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

இதுகுறித்து எம்எல்ஏ வெங்கட ரமணப்பா கூறும்போது, “அந்த இளைஞர் மரியாதை குறைவாக பேசியதால் கோபத்தில் அவரை அடித்துவிட்டேன். இதற்காக அவரிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்டேன்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in