Published : 16 Apr 2016 11:20 AM
Last Updated : 16 Apr 2016 11:20 AM

மேற்குவங்கத்தில் 2-ம் கட்ட தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது: 56 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு

மேற்குவங்க மாநிலத்தில் அனல் பறக்கும் 2-ம் கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. தொடர்ந்து 56 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடக்கிறது.

மேற்குவங்க மாநிலத்துக்கு 6 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டத் தேர்தல் ஏப்ரல் 4, 11 ஆகிய இரு நாட்கள் நடந்தது. இதையடுத்து அலிபுர்துவார், ஜல்பாய்குரி, டார்ஜிலிங், உத்தர் தினாஜ்புர், தக்ஷின் தினாஜ்புர், மால்டா, பிர்பம் ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள 56 தொகுதிகளுக்கு நாளை 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. இதையொட்டி கடந்த சில தினங்களாக நடந்து வந்த அரசியல் கட்சிகளின் தீவிர தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது.

இந்த தேர்தலுக்காக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பிற மத்திய அமைச்சர்கள் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டனர். காங்கிரஸ் சார்பில் கட்சித் தலைவர் சோனியா பிரச்சாரம் செய்தார்.

திரிணமூல் காங்கிரஸ் சார்பில் அதன் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி 2-ம் கட்ட தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்தார். இதே போல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சூரிய காந்தா மிஸ்ராவும் பம்பரம் போல் சுழன்று வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

33 பெண்கள் உள்பட மொத்தம் 383 வேட்பாளர்கள் இந்த தேர்தல் களத்தில் உள்ளனர். இவர்களில் 56 பேர் கோடீஸ்வரர்கள். 215 பேர் வருமான வரி விவரத்தை தெரிவிக்க வில்லை. 1.2 கோடி பேர் வாக் குரிமை பெற்றுள்ளனர். 2-ம் கட்டத் தேர்தலில் 56 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடக் கிறது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x