உத்தராகண்டில் கிரிமினல் குற்றவாளியின் ரூ.150 கோடி சொத்து பறிமுதல்

உத்தராகண்டில் கிரிமினல் குற்றவாளியின் ரூ.150 கோடி சொத்து பறிமுதல்
Updated on
1 min read

ஹரித்வார்: உத்தராகண்ட்டில் நீதிமன்ற உத்தரவின்படி கிரிமினல் குற்றவாளி யஷ்பால் சிங் தோமரின் ரூ.150 கோடி சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களில் பல்வேறு கொலை, கொள்ளைகளில் ஈடுபட்ட கிரிமினல் குற்றவாளி யஷ்பால் சிங் தோமர், இந்த மாநிலங்களில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை சட்டவிரோதமாக வாங்கி உள்ளார். தலைமறைவாக இருக்கும் தோமரை பிடிக்க சிறப்பு அதிரடிப் படையினர் நீண்ட காலமாக தீவிரமாக செயல்பட்டனர்.

இந்நிலையில், தோமருக்கு சொந்தமான சொத்துக்கள் குறித்து போலீஸார் நீதிமன்றத்தில் அறிக்கை அளித்தனர். அதனை சட்டரீதியாக பரிசீலித்த உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்ட நீதிபதி வினய் ஆனந்த், தோமருக்கு சொந்தமான ரூ.150 கோடி மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டார். அதன்படி, தோமரின் ரூ.150 கோடி மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையை அதிகாரிகள் தொடங்கி உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in