

நூறு நாள் வேலை திட்டம் என்றழைக்கப்படும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்ட பயனாளிகளுக்கான ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பை உறுதி செய்ய கடந்த 2006-ம் ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் அமல்படுத்தப் பட்டது. இத்திட்டத்தின் ஊதிய நிர்ணயம், நுகர்வோர் குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டிருக் கிறது. அதன்படி ஆண்டுதோறும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஊதியம் உயர்த்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விலை நிர்ணயப்படி பல்வேறு மாநிலங் களில் ஊதியம் உயர்த்தப்பட்டுள் ளது. தமிழகத்தில் ஒருநாள் ஊதியம் ரூ.183-ல் இருந்து ரூ.203 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கேரளா வில் ரூ.229-ல் இருந்து ரூ.240 ஆகவும் கர்நாடகாவில் ரூ.204-ல் இருந்து ரூ.224 ஆகவும் ஆந்திரா வில் 180-ல் இருந்து ரூ.194 ஆகவும் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.
ஹரியாணாவில் ஏற்கெனவே ரூ.251 ஊதியம் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.259 ஆக ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் ஹரியாணா வில்தான் மிக அதிகபட்ச ஊதியம் வழங்கப்படுகிறது. அதற்கு அடுத் தபடியாக சண்டிகரில் ரூ.248, கேரளாவில் ரூ.240 ஊதியம் அளிக்கப்படுகிறது. ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஊதிய உயர்வு அமலுக்கு வந்துள்ளது.