டெல்லியில் நடந்த வன்முறை தொடர்பாக 23 பேர் கைது

டெல்லியில் நடந்த வன்முறை தொடர்பாக 23 பேர் கைது
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்லியில் கடந்த சனிக்கிழமை மத ஊர்வலத்தில் நடந்த வன்முறை தொடர்பாக 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் ராகேஷ் அஸ்தானா கூறியுள்ளார்.

டெல்லியில் ஜஹாங்கிர்புரி பகுதியில் கடந்த சனிக்கிழமையன்று ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் பங்கேற்றோர் மீது மற்றொரு தரப்பினர் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால்வன்முறை வெடித்தது. வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. போலீஸார் உட்பட பலர் காயமடைந்தனர். சம்பவம் நடந்தஇடத்தில் போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.

இந்நிலையில், டெல்லிகாவல் ஆணையர் ராகேஷ் அஸ்தானா நேற்று கூறியதாவது:

வன்முறை நடந்த இடத்தில்இப்போது அமைதி நிலைநாட்டப் பட்டுள்ளது. வன்முறை தொடர்பாக இதுவரை இரு பிரிவுகளையும் சேர்ந்த 23 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

வன்முறை தொடர்பாக கிரைம் பிரிவு போலீஸார் விசாரிக்கின்றனர். 14 குழுக்கள் அமைக்கப் பட்டு விசாரணை நடந்து வரு கிறது. குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் எந்தப் பிரிவு, எந்த மதமாக இருந்தாலும் எந்த விதமான பாரபட்சமும் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும். சிசிடிவிகாட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம். வதந்திகள் பரப்பி அமைதியை சீர்குலைப்பதைத் தடுக்க சமூக வலைத்தளங்களையும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.

இவ்வாறு டெல்லி காவல்ஆணையர் ராகேஷ் அஸ்தானா கூறினார்.

- பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in