கோப்புகள் மீது 3 நாட்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் - உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு

கோப்புகள் மீது 3 நாட்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் - உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு
Updated on
1 min read

லக்னோ: உத்தர பிரதேசத்தில் 2-வது முறையாக முதல்வர் பதவியேற்ற யோகி ஆதித்யநாத் அரசு நிர்வாக நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளார். புதன்கிழமையன்று அரசு அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். அப்போது, மக்கள் குறைகள், அதன் மீதான நடவடிக்கைகள் தொடர்பான குடிமக்கள் சாசனப் பட்டியலை அதிகாரிகள் தயார் செய்து அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும், பொதுமக்கள் குறைகள் தொடர்பாக 3 நாட்களுக்கு மேல் எந்த ஒரு கோப்பையும் நிலுவையில் வைத்திருக்க கூடாது என்றும் ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

அப்படி தாமதமானால் சம்பந்தப்பட்டவர்களை பொறுப்பாளியாக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், அரசு அலுவலகங்களில் உணவு இடைவேளை 30 நிமிடங்களுக்கு மேல் இருக்கக் கூடாது எனவும் ஊழியர்களின் நேரம் தவறாமையை உறுதிப்படுத்தும்படியும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in