

தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ. பிரபாகர் மாரடைப்பால் காலமானார். நள்ளிரவில் அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 64. நந்திகமா தொகுதியில் இருந்து அவர் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை புலிசிந்தலாவில் நீர்பாசணத் துறை சார்பில் நடந்த விழாவில் அவர் கலந்து கொண்டார்.
மாலையில் உடல் நலன் சரியில்லை என தெரிவித்ததை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் அவரது உயிர் பிரிந்தது.
1980-களில் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார் பிரபாகர். ரிசர்வ் தொகுதியான நத்திகமாவில் முதம் முதலில் 2009-ல் வெற்றி பெற்றார். பின்னர் 2014 தேர்தலிலும் வெற்றி பெற்றார்.
வழக்கறிஞராக தனது பணியை துவக்கிய பிரபாகர் அரசியலில் இணைந்து எம்.எல்.ஏ- ஆனார். சமீப காலமாகவே அவர் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.