

மருத்துவ பொது நுழைவுத் தேர்வு நாளை (மே-1) திட்டமிட்டபடி நடக்கும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கு இரண்டுகட்டங்களாக பொது நுழைவுத் தேர்வு நடத்தும் மத்திய அரசின் முடிவுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதன்படி மே 1-ம் தேதி (இன்று) மற்றும் ஜூலை 24-ம் தேதிகளில் தேர்வு நடத்தப்படவுள்ளது.
இந்நிலையில், மருத்துவ பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி மாணவர்கள் சிலர் மனு செய்திருந்தனர்.
மனு விவரம்:
அந்த மனுவில் தேர்வுக்கு தங்களை தயார் செய்து கொள்ள கால அவகாசம் தேவை என்றும், மாநில மற்றும் மத்திய அரசின் சி.பி.எஸ்.இ பாட திட்டங்களுக்கு இடையே பெரிய இடைவெளி இருப்பதால் தேர்வுக்கு தங்களை தயார் செய்து கொள்ள கால அவகாசம் தேவைப்படுகிறது என்று மாணவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. மாணவர்கள் சார்பில் மனு தாக்கல் செய்த வழக்கறிஞர்களிடம் 'தயவு செய்து தேர்வை நடத்த விடுங்கள்' என நீதிபதிகள் தெரிவித்தனர்.
எம்.பி.க்கள் எதிர்ப்பு:
முன்னதாக, மே 1-ம் தேதி மருத்துவ பொது நுழைவுத் தேர்வு நடத்துவதற்கு மக்களவையில் பல்வேறு கட்சி எம்.பி.க்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) எதிர்ப்பு தெரிவித்தனர். குறுகிய கால அவகாசத்துக்குள் மாணவர்கள் தேர்வுக்கு தயாராக முடியாது என அவர்கள் தெரிவித்தனர்
. மேலும் வரும் 2018 வரை மாநில அரசுகளுக்கு அவகாசம் அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்திர் என்பது குறிப்பிடத்தக்கது.