Published : 11 Apr 2022 07:45 AM
Last Updated : 11 Apr 2022 07:45 AM
புதுடெல்லி: ‘‘விவசாயிகள் பலமாக இருந்தால், புதிய இந்தியா இன்னும் வளமானதாக இருக்கும்’’ என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி நேற்று வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:
விவசாயிகள் பலமானவர்களாக இருந்தால், புதிய இந்தியாவும் வளமானதாக இருக்கும்.விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்த ‘பி.எம். கிஸான் சம்மான் நிதி’ உட்பட பல்வேறு வேளாண் தொடர்புடைய திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அவற்றின் மூலம் கோடிக்கணக்கான விவசாயிகள் பலனடைந்து வருகின்றனர்.
விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. ரூ.2,000 என 3 தவணைகளாக அந்தப் பணம் விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரிடையாக செலுத்தப்பட்டு வருகிறது. அதன் படி இதுவரை 1.82 லட்சம் கோடி ரூபாய் அவர்களுடைய வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 11.3 கோடி விவசாயிகள் பலனடைந்துள்ளனர்.
விவசாயிகளால் பெருமை
விவசாய சகோதர, சகோதரி களின் அயராத உழைப்பை கண்டு இந்த நாடு பெருமை கொள்கிறது. விவசாயிகள் பலமாக இருந்தால், அதை விட பல மடங்கு வளமானதாக புதிய இந்தியா மாறும். பி.எம்.கிஸான் சம்மான் நிதி மற்றும் பல வேளாண் திட்டங்களால் விவசாயிகள் பலமடைந்து வருவதை நினைத்து எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
இவ்வாறு பிரதமர் மோடி கூறி யுள்ளார்.
- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT