Published : 10 Apr 2022 06:44 PM
Last Updated : 10 Apr 2022 06:44 PM

பிஹாரில் 60 அடி நீள பாலம் திருட்டு: பழைய இரும்பு விற்பவர்களை தேடும் காவல்துறை

இந்தியா: பிஹாரில் 60 அடி இரும்புப் பாலத்தை 2 நாட்கள் ஆர அமர்ந்து திருடிச் சென்ற சம்பவம் தொடர்பாக பழைய இரும்பு விற்பனை செய்பவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

பிஹார் மாநில தலைகர் பாட்னாவிலிருந்து தெற்கே 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது அமியவார் கிராம். இந்த கிராமத்தில் ஆற்றின் குறுக்கே 1972 ஆம் ஆண்டு இரும்பு பாலம் ஒன்று கட்டப்பட்டது. 500 டன் எடை கொண்ட இப்பாலம் தற்போது பயன்பாட்டில் இல்லை. மேலும் சேதம் அடைந்த இந்தப் பாலத்தை இடிக்க வேண்டும் என கிராம மக்கள் நீர்ப்பாசனத்துறையிடம் கோரிக்கை வைத்து இருந்தனர்.

இதை அறிந்த மர்ம கும்பல் ஒன்று தங்களை அரசு அதிகாரிகள் என்று கூறி பாலத்தை வெட்டத் தொடங்கியுள்ளனர். 2 நாட்கள் பொறுமையாக ஆர அமர்ந்து கேஸ் கட்டர்கள், பொக்லைன் இயந்திரங்கள் மூலம் பாலத்தை வெட்டி எடுத்துள்ளனர். இது தொடர்பாக கிராம மக்கள் அவர்களிடம் கேட்ட போது, நாங்கள் நீர்ப்பாசத்துறை அதிகாரிகள் என்றும் தெரிவித்துள்ளனர்.

சந்தேகம் அடைந்த பொதுமக்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதற்குள்ளாக அந்த கும்பல் தப்பிச் சென்று விட்டது. இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக பழைய இரும்பு விற்பனை செய்பவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். இது குறித்து போலீஸார், இந்தக் கும்பலைச் சேர்ந்த சிலரை அடையாளும் கண்டுள்ளோம். மேலும் சிலரை அடையாயம் காண முடிவில்லை என்று தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்புதான் இந்த பாலத்திற்கு அருகில் இருந்த பழைய இரும்புப் பொருட்கள் அகற்றப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x