Published : 10 Apr 2022 05:27 AM
Last Updated : 10 Apr 2022 05:27 AM
புதுடெல்லி: டெல்லியில் உள்ள அம்ரிதா செர்கில் மார்க் பகுதியில், பாலிவுட் நடிகை சோனம் கபூர் மற்றும் அவரது கணவர் ஆனந்த் அகுஜாவின் வீடு உள்ளது. இந்த வீட்டில், கடந்த பிப்ரவரி மாதம் 11-ம் தேதி அன்று ரூ.2.4 கோடி மதிப்பிலான நகை, பணம் கொள்ளை போனது தெரியவந்துள்ளது.
ஆனால் இதுகுறித்து கடந்த பிப்ரவரி 23-ம் தேதிதான் போலீஸில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து போலீசார் உடனடியாக வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
சோனம் கபூரின் மாமனார் ஹரிஷ் அகுஜாவுக்கு சொந்தமான ஷாகி ஏற்றுமதி ஆலை பரிதாபாத்தில் உள்ளது. இதற்கான வரி தள்ளுடி சலுகைகளை தவறாக பயன்படுத்தி, ஹரிஷ் அகுஜாவின் போலி டிஜிட்டல் கையெழுத்து மூலம், ஒரு கும்பல் நூதன முறையி்ல ரூ.27 கோடியை பணமாக்கியது. இது தொடர்பாக கடந்த ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT