

பாகிஸ்தான் சிறையில் மர்மமான முறையில் இறந்த கிர்பால் சிங்கின் குடும்பத்தினர், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேற்று சந்தித்து பேசினர்.
பாகிஸ்தானில் உள்ள கிர்பால் சிங்கின் உடலை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு அனைத்து உதவிகளும் செய்யும் என்று அப்போது ராஜ்நாத் உறுதி அளித்துள்ளார்.
கிர்பால் சிங்கின் சகோதரி ஜாகிர் கவுர் நேற்று உள்துறை அமைச்சரை சந்தித்தபோது, அவருடன் தல்பீர் கவுர் என்பவரும் வந்திருந்தார். இவர், பாகிஸ்தான் சிறையில் கடந்த 2013 மே மாதம் இறந்த சரப்ஜித் சிங் என்பவரின் சகோதரி ஆவார்.
கடந்த 1992-ல் பஞ்சாபில் வாகா எல்லையை கடந்து பாகிஸ்தான் பகுதிக்கு சென்றதாக கிர்பால் கைது செய்யப்பட்டார்.
கடந்த 25 ஆண்டுகளாக சிறை யில் வாடிய கிர்பால், கடந்த ஏப்ரல் 11-ம் தேதி இறந்தார். அவர் மாரடைப்பால் இறந்ததாக பாகிஸ்தான் கூறுகிறது.