

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள வடக்கு 24 பர்கானாஸ் மற்றும் ஹவுரா மாவட்டங்களில் உள்ள 49 தொகுதிகளுக்கு இன்று 4-ம் கட்டத் தேர்தல் நடக்கிறது. கமரஹதி தொகுதியில் போட்டி யிடும் திரிணமூல் காங்கிரஸ் வேட் பாளரும் முன்னாள் போக்குவரத்து அமைச்சருமான மதன் மித்ரா, சாரதா நிதி மோசடியில் சிக்கி தற்போது அலிபூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பிரச்சாரம் செய்ய மதன் மித்ரா வுக்கு அனுமதி கிடைக்காத போதிலும், இன்று நடக்கும் வாக்குப்பதிவுக்காவது அவர் வாக்களிக்க வருவார் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த் திருந்தனர்.
ஆனால் குற்றம்சாட்டப்பட்ட நபர் மீது குற்றம் நிரூபிக்கப்படும் வரை, அவர் தேர்தலில் போட்டியிடலாம் என்றும் அதே சமயம் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி விசாரணை கைதியாகவோ அல்லது தண்டனை பெற்ற கைதியாகவோ சிறைவாசம் அனுபவிக்கும் நபருக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை என்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால் அவரது குடும்பத்தின ரும், ஆதரவாளர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.