Published : 05 Apr 2022 08:45 AM
Last Updated : 05 Apr 2022 08:45 AM
புதுடெல்லி: கடந்த 2021 அக்டோபர் 3-ம் தேதி உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் கெரி மாவட்டம், டிகுன்யா கிராமத்தில் விவ சாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது மத்திய உள்துறை இணை யமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவின் கார் மோதி 4 விவசாயிகள் உயிரிழந்தனர். அதன்பின் ஏற்பட்ட கலவரத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக கடந்த 2021 அக்டபோர் 9-ம் தேதி ஆசிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டார். கடந்த பிப்ரவரி 15-ம் தேதி அலகாபாத் உயர்நீதிமன்றம் அவரை ஜாமீனில் விடுதலை செய்தது. இதை எதிர்த்து விவசாயிகள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு வழக்கை தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூரிய காந்த், ஹிமா கோலி அமர்வு விசாரித்து வருகிறது. வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது விவசாயிகள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் துஷ்யந்த் தவே, பிரசாந்த் பூஷண் ஆஜராகி "ஆசிஷ் மிஷ்ரா வேண்டுமென்றே விவசாயிகள் மீது காரை மோதி உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளார். அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தினர்.
உ.பி. அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் மகேஷ் ஜெத்மலானி ஆஜராகி வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு தலைமை நீதிபதி ரமணா கூறும்போது, "குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீனை அனு மதிப்பதா, ரத்து செய்வதா என்பதை மட்டுமே உச்ச நீதிமன் றம் விசாரிக்கிறது. வேறு விவகாரங்களை நீதிமன்றத்தில் எழுப்பக்கூடாது" என்றுதெரிவித்தார். இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT