நாடாளுமன்ற அடுத்த கூட்டத்தொடர் 25-ல் தொடக்கம்

நாடாளுமன்ற அடுத்த கூட்டத்தொடர் 25-ல் தொடக்கம்
Updated on
1 min read

மக்களவை மற்றும் மாநிலங்கள வையின் அடுத்த கூட்டத் தொடர் வரும் 25-ம் தேதி தொடங்குகிறது. மே13 வரை நீடிக்க வாய்ப்புள்ள இக்கூட்டத் தொடர், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வாகும்.

இது தொடர்பாக மக்களவை செயலகம் நேற்று விடுத்துள்ள அறிக்கையில், “16-வது மக்களவை யின் 8-வது அமர்வு ஏப்ரல் 25-ம் தேதி தொடங்குகிறது. அவை அலுவல்களை பொறுத்து இந்த அமர்வு மே 13 வரை தொடர வாய்ப் புள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

இதுபோல் மாநிலங்களவை செயலகம் விடுத்துள்ள அறிக்கை யில், “மாநிலங்களவையின் 239-வது அமர்வு ஏப்ரல் 25-ம் தேதி, திங்கள்கிழமை தொடங்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத் தொடரில், ஜிஎஸ்டி மசோதா உட்பட நிலுவையில் உள்ள சில முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்கும் என மத்திய அரசு எதிர்பார்க்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in