

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சர்வதேச எல்லையில் நேற்று பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்து மீறி தாக்குதலில் ஈடுபட்டனர்.
சம்பா பகுதியில் பாகிஸ்தான் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ஜோகிந்தர் சிங் தெரிவித்தார்.
நேற்று அதிகாலை சுமார் 2.15 மணிக்கு 5-6 ரவுண்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. ஆனால், இதற்கு இந்திய தரப்பிலிருந்து பதில் தாக்குதல் நடத்தப்படவில்லை.
கடந்த 7 மாதமாக பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் எதிலும் ஈடுபடவில்லை. இதனிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறிய ரக ராக்கெட் குண்டுகளை பூஞ்ச் பகுதியில் வீசியது. இதைத்தொடர்ந்து, இரு தரப்பிலும் பட்டாலியன் கமாண்டர் அளவிலான கொடி அமர்வுக் கூட்டம் நடைபெற்றது.