

ஆந்திர மாநிலத்தில் கடும் கோடை வெயிலை எதிர்கொள்வது தொடர்பாக, அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் உள்துறை அமைச்சர் சின்ன ராஜப்பா தலைமையில் ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் அமைச்சர் சின்ன ராஜப்பா பேசும்போது, “இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிக வெப்பம் இருக்கும் என்று கூறப் படுகிறது. ஆந்திர மாநிலத்தில் இந்த ஆண்டு வெயில் கொடுமைக்கு இதுவரை 45 பேர் இறந்துள்ளனர்.
கடப்பா மாவட்டத்தில் அதிக பட்சமாக 16 பேர் இறந்துள்ளனர். காகுளம் 2, விஜய நகரம் 3, மேற்கு கோதாவரி 1, கிருஷ்ணா 2, பிரகாசம் 11, சித்தூர், கர்னூல் தலா 3, அனந்தபூர் 4 என 29 பேர் இறந்துள்ளனர். வெயிலை சமாளிக்க முக்கிய இடங்களில் தண்ணீர் பந்தல்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
வெயில் தாக்கத்தை சமாளிக் கும் முறை குறித்து பொது மக்களி டம் மருத்துவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். முடிந்தவரை பகலில் வெளியே வருவதை தவிர்க்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்ள வேண்டும்” என்றார்.